தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது.
இங்கு ஏராளமான வயல்வெளிகள் உள்ளது. அதனால் கால்நடை வளர்ப்பு என்பது இங்கு பிரதான தொழிலாக உள்ளது. தினமும் அதிகாலை மேச்சலுக்காக கால்நடைகள் காடுகள் நோக்கி செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று அதிகாலை மாடுகள் மேய்ச்சலுக்காக தென்திருப்பேரை அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் திருநெல்வேலி திருச்செந்தூர் மெயின் ரோட்டை கடந்து சென்றது. அப்போது திடீரென திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த டேங்கர் லாரி ஒன்று மாடுகள் சென்ற கூட்டத்தில் மோதியது அதில் ஒரு மாடு சம்பவ இடத்திலேயே பலியானது மற்றொரு மாடு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தது. மாட்டின் மீது மோதிய டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு பாதசாரிகள் செல்ல நடைபாதை அமைக்கப்பட்ட இடத்தில் மின்விளக்கு அமைக்க கம்பம் ஒன்று நடப்பட்டிருந்தது அதில் மோதியதில் அந்தக் கம்பம் சேதமடைந்தது அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த ஆழ்வார்திருநகரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக