தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. இந்த தாமிரபரணி நதி மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி என 4 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் விவசாயத்திற்கும், தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்கி வருகிறது.
இந்த தாமிரபரணி ஆற்றில் 9 தடுப்பணைகள் உள்ளது. இதன் 80 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசதி வசதி பெற்று வருகிறது.
இந்த நிலையில் தான் தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையாக விளங்குகிறது ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டு. சுமார் 150 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக உள்ளது. மேலும் இந்த அணைக்கட்டு மூலம் வடகால் மற்றும் தென்கால் மூலம் விவசாயத்திற்கு பாசன வசதி வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் ஷட்டர்கள் அனைத்தும் பழுது நீக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள ஷட்டரில் பழுது ஏற்பட்டுள்ளது. இரண்டு ஷட்டர்களில் 7 இடங்களில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் வினாடிக்கு பல ஆயிரம் கன அடி நீர் வீணாக கடலுக்கு செல்கிறது.
இந்த அணைக்கட்டில் ஏற்பட்டுள்ள ஓட்டையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக