Nigazhvu News
30 Nov 2024 5:21 AM IST

Breaking News

ஏரல் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

Copied!
Nigazhvu News

ஏரல் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். மாணவ மாணவிகளுக்கு சத்துணவை கூடுதல் சுவையுடன் வழங்க உத்தரவு.




தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.  

நட்டாத்தி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கொம்புகாரன்பொட்டலில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் புதிதாக கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பெரிதும் சேதம் அடைந்த ஏரல் ஆற்று பாலம் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர், புதிதாக போடப்பட்ட குரங்கணியில் புறவழிச் சாலையின் தரத்தை அறிய சாலையில் பள்ளம் தோண்டி எவ்வளவு உயரத்தில் போடப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தார்.




அதைத் தொடர்ந்து மாவடிபண்ணை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு திடீரென ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்படும் சத்துணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, சத்துணவு சமைக்க பயன்படும் அரிசி கணக்கில் உள்ள இருப்பை விட கூடுதலாக இருந்தது. அதை முன் இருப்பு என்று கணக்கில் வரவு வைப்பதுடன் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்படும் சத்துணவு இன்னும் கூடுதல் சுவையுடன் இருக்க வேண்டும் என பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் தென்திருப்பேரையில் கட்டப்பட்ட வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடத்தையும், 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார ஆய்வக கூட கட்டிடத்தையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

வாழைப்படத்தின் உண்மை சம்பவத்தில் இறந்தவர்களின் கல்லறைகளை பார்த்து செல்கின்றனர்.

தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு தண்ணீர் சேமிக்கும் ஷட்டரில் ஓட்டை. உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரிக்கை.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!