இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் வாழை. இந்த படம் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்தப்படம் என்று அவரே கூறியிருந்தார்.
அந்த படத்தில் வாழைத்தார் ஏற்றிச் செல்லும் லாரி கவிழ்ந்து அதன் மேல் பயணம் செய்த 19 பேர் உயிரிழந்த சம்பவத்தை வைத்து உருவானது தான் வாழைத்திரைப்படம்.
இந்த விபத்தில் மாரி செல்வராஜ் சொந்த ஊரான புளியங்குளத்தைச் சேர்ந்த 15 பேரும், அருகே உள்ள நாட்டார்குளத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர். இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
இறந்தவர்களில் புளியங்குளத்தைச் சேர்ந்த 15 பேரின் கல்லறைகள் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையின் ஓரம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் படம் வெளியான தினம் படக்குழுவினர் விபத்தில் இறந்த புளியங்குளத்தைச் சேர்ந்தவர்களின் கல்லறைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் திருநெல்வேலி தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களும் இந்த விபத்து குறித்து அறிந்தவர்களும் அந்த வழியாகச் செல்லும் போது சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கல்லறைகளை பார்த்தபடி செல்கின்றனர்.
இந்த கல்லறைகளில் 15 பேரில் 8 பேரின் கல்லறைகள் கட்டிடத்தால் கட்டப்பட்டுள்ளது. மற்ற 7 பேரின் கல்லறைகள் மண்ணால் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
இந்த விபத்தில் தன் உயிரை கொடுத்து மூன்று பேரை காப்பாற்றிய அண்ணா விருது பெற்ற அர்ச்சுணன் மகன் லெட்சுமணன் என்ற சிறுவனின் கல்லறை தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக