தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கொடியன்குளம் கிராமத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் மனித உரிமை மீட்பு நாள் இன்று புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.
அப்போது மேளதாளம் முழங்க டாக்டர் கிருஷ்ணசாமி மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு கிராம மக்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில்,
கடந்த 30 வருடங்களுக்கு முன்னதாக ஆட்சியாளர்களால் ஏவி விடப்பட்டு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் சேர்ந்து கொடியங்குளம் கிராமம் தாக்கப்பட்ட ஆகஸ்ட் 31ஆம் தேதி மனித உரிமை மீட்பு நாளாக புதிய தமிழகம் கட்சி அனுசரித்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் தாலுகா பகுதியானது மிகப்பெரிய வறட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். இந்தப் பகுதியில் அந்த காலகட்டத்தில் இந்த சமூக கொடுமைகளை எதிர்த்து நிற்க முடியாமல் மக்கள் இருந்தார்கள். இக்கிராமத்தில் இருந்த இளைஞர்கள் பலர் கொடுமைகளிலிருந்து விடுபடவும் வறுமைகளில் இருந்து விடுபடவும் வெளிநாடுகளுக்கு சென்று பொருள் சேர்த்து வந்து கிராமத்தை வளப்படுத்தினார்கள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் கொடியங்குளம் கிராமத்தை முற்றாக அடிமைப்படுத்தி தங்களுடைய வயல்களில் அவர்களை அடிமைப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வோடு அன்றைய காவல்துறையாலும் மாவட்ட நிர்வாகத்தாலும் தாக்கப்பட்டது
ஆனால் அதுவே வேறு விதமாக முடிந்தது. ஒட்டுமொத்தமாக இந்த மக்களுடைய எழுச்சியை அழித்துவிட வேண்டும் என எண்ணினார்களோ அதன் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் தேவேந்திரகுல வேளாளர் மக்களும் ஆதிதிராவிட மக்களும் மற்றும் பல சமுதாய மக்களும் எழுச்சி பெற்றார்கள் மண்ணுரிமையை மனித உரிமையை வாழ்வுரிமையை மீட்டெடுப்பதற்கான போராட்டங்களை துவக்கினார்கள். இந்த 30 ஆண்டுகளில் இந்த மக்களிடையே ஏற்பட்ட எழுச்சி தேவேந்திரகுல வேளாளர் மக்களிடையே மிகப்பெரிய முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே ஆகஸ்டு 31ஆம் தேதியை நாங்கள் மனித உரிமை மீட்பு நாளாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரித்து வருகிறோம்.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தோட்டத்து தொழிலாளர்கள் 1929 ஆம் ஆண்டிற்கு முன்னரே அங்கு குடியேறியவர்கள். சட்டரீதியாக அந்த மக்கள் அங்கு வாழ்வதற்கு உரிமை பெற்றவர்கள். ஆனால் 1929 ஆம் ஆண்டிற்கு பிறகு அங்கு தேயிலை தோட்டங்களை அமைத்த தேயிலை தோட்ட நிர்வாகம் அங்கு வாழ்ந்த மக்களை தேயிலை தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தி பல கொடுமைகளையும் புரிந்தார்கள். தற்போது நிர்வாகம் தனது குத்தகை முடிந்து வெளியேறும் பொழுது மக்களையும் வெளியேற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பல வன்முறைகளை ஏவி விடுகிறார்கள். மாஞ்சோலை மக்களை கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற்றக் கூடாது மாஞ்சோலையை மீட்டு தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு அமர்வுக்கு தொடர்ந்திருக்கிறேன். அந்த வழக்கானது சிறப்பு மாற்றப்பட்டிருக்கிறது. டெல்லி மனித உரிமை ஆணையத்திடமும் மாஞ்சோலை மக்களுக்கு ஏற்படக்கூடிய மனித உரிமை மீறல்களை சொல்லி இருக்கிறேன். அவர்களும் விரைவில் மாஞ்சோலை வந்து விசாரணை செய்ய உள்ளனர். சில தவறான அதிகாரிகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது. எனவே தமிழ்நாடு அரசு மாஞ்சோலை மக்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
தமிழ்நாட்டில் மது மற்றும் கஞ்சாவை ஒழித்தால் தான் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படும் மதுவை வைத்துக்கொண்டு கஞ்சாவை ஒழிக்க முடியாது மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா பழக்கங்கள் உருவாகி கட்டுப்பாடு இல்லாமல் உள்ளது . சிவகாசி கோவில்பட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் எண்ணற்ற தீப்பெட்டி பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளது அதில் பல விபத்துகள் நடக்கிறது அதில் பலர் இருக்கிறார்கள் ஆனால் அரசாங்கம் 50,000 முதல் 2 லட்சம் வரை மட்டுமே நிவாரணமாக அவர்களுக்கு கொடுக்கிறது நேர்மையாக வேலைக்கு செல்பவர்கள் யாராவது செய்யக்கூடிய தவறுகளால் விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் அவர்களுக்கு இரண்டு லட்சம் கொடுப்பதற்கு உங்களுக்கு கசப்பாக இருக்கிறது ஆனால் சாராயம் குடித்துவிட்டு இறக்கிறவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் கொடுக்கப்படுகிறது.
நான் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக போது ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு பிடி மண் கூட அல்ல விடவில்லை . பின் தங்கிய பகுதியான ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வேலைவாய்ப்பை கொடுக்க வேண்டும் மேலும் இங்கு பல காற்றாலைகள் அமைக்கப்பட்டு விளைநிலங்கள் எல்லாம் போய்விட்டது எனவே தொழில் வளத்தை பெருக்க வேண்டும் குளங்கள் ஏரிகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எனது தலைமையில் விரைவில் போராட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டை வளப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளிநாட்டிற்கு சென்றதை வரவேற்கிறேன் அதேபோல் திமுக கட்சியினர் சுமார் 2 லட்சம் கோடியை மலேசியா சிங்கப்பூர் மொரிசியஸ் உள்ளிட்ட நாடுகளில் கொண்டு முதலீடு செய்கிறார்கள் அந்த 2 லட்சம் கோடி யை தமிழ்நாட்டில் முதலீடு செய்தால் நம் முதலமைச்சர் ஏன் வெளிநாடுகளுக்கு சென்று 100 கோடி 200 கோடி என முதலீடுகளை ஈர்க்க கையேந்த வேண்டும். ஒரு கோடி இரண்டு கோடி கொடுத்தாலும் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலை மாறி தற்போது ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டு உட்கார்ந்து படித்தால் கிராமப்புற மாணவர்களும் மாணவ மாணவிகளும் நீட் தேர்வை எழுதி மருத்துவராக முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது சந்தோசமாக இருக்கிறது
என பேசினார்.
உங்கள் கருத்தை பதிவிடுக