Nigazhvu News
17 Mar 2026 3:21 AM IST

சாத்தான்குளம் அருகே பெற்றோர், பைக் வாங்கித்தர மறுத்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்...

Copied!
Nigazhvu News

சாத்தான்குளம் அருகேயுள்ள ஸ்ரீவெங்கடேசபுரம் உடையாண்டி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்விவசாயி, இவருக்கு மனைவி விஜயா(52) மற்றும் 5 மகள்கள், ராம்லெட்சுமணன் என்ற மகன் உள்ளனர். இவர்களில் மகன் ராம்லெட்சுமணன், நெல்லையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே கல்லூரிக்கு செல்வதற்கு வசதியாக புதிய பைக் வாங்கித்தருமாறு தனது தாயிடம் கேட்டுள்ளார். ஆனால் படிப்பு முடித்த பின்னர் வாங்கித்தருவதாக மகனிடம் தாய் கூறியதாக தெரிகிறது.


இதனை ஏற்க மனமில்லாமல் விரக்தி அடைந்த மாணவர் ராம்லெட்சுமணன், கடந்த 26ம்தேதி வயலுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி  ராம்லெட்சுமணன்  உயிரிழந்தார்.


இதுகுறித்து அவரது தாய் விஜயா அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ. முருகேசன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் இயேசு ராஜசேகரன் விசாரணை நடத்தி வருகிறார். 


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

பன்னம்பாறையில் :ஆட்டு வியாபாரி கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை கேட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சாலை மறியல்

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்திற்குச் சென்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் திடீர் மாயம் - பசுவந்தனை போலீசார் விசாரணை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்