தமிழக பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அரசுத்துறை ஆய்வுப் பணிகளுக்காக தூத்துக்குடி வருகை புரிந்தார். தூத்துக்குடியில் அமைச்சர் எ.வ.வேலுவை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பருவமழை காலங்களில் ஏற்படும்காற்றாற்று வெள்ளம் மற்றும் மழைநீர் தேங்குதல் போன்ற பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக கோரிக்கை மனுவினை அளித்தார்.
மேலும் கடம்பூர்- புளியம்பட்டி - தெய்வச்செயல்புரம் சாலை கிலோமீட்டர் 15/10, 20/4 ல் சிறு பாலங்கள் அமைக்க வேண்டும், கடம்பூர்- நாரைக்கிணறு -கே.கைலாசபுரம் சாலையில் கிலோமீட்டர் 0/2,0/4,3/4 ல் சிறு பாலங்கள் அமைக்க வேண்டும்,கடம்பூர்- புளியம்பட்டி -தெய்வச்செயல்புரம் சாலையில் சிங்கத்தாகுறிச்சி முதல் தெய்வசெயல்புரம் சாலையில் 27/800 - 34/665 ல் 3.75 மீட்டரில் இருந்து 7 மீட்டர் சாலையாக அகல படுத்த வேண்டும், பசுவந்தனை - எஸ். கைலாசபுரம் சாலையில் 12/4 ல் சிறு பாலங்கள் அமைக்க வேண்டும், ஒட்டநத்தம் -அயிரவன்பட்டி சாலையில் 0 -3 கிலோமீட்டர் சாலையில் 3.75 மீட்டரில் இருந்து 7 மீட்டர் சாலையாக அகலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் எவவேலுவிடம் எம்.எல் .ஏ சண்முகையா கோரிக்கை மனுவினை அளித்தார்.
உங்கள் கருத்தை பதிவிடுக