தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பையா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் தாமோதரன் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். சிறப்பு விருந்தினராக செக்காரக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் இராமலெட்சுமி கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதிப்பால் காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விளக்கவுரையாற்றி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது பேருந்து நிலையம், முக்கிய வீதிகளின் வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. அதன் பின்னர் சுற்றுச்சூழலை பாதுகாத்து, நாட்டின் பசுமை போர்வையை மேம்படுத்த அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பேரணியில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை செக்காரக்குடி பால் கூட்டுறவு சங்கத் தலைவர் இளையம்பெருமாள் செய்திருந்தார். நிறைவாக பள்ளியின் பசுமை படை ஆசிரியர் ஆனந்தராம சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
உங்கள் கருத்தை பதிவிடுக