வ.உ.சி. பிறந்தநாளை தேசிய வழக்கறிஞர் தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் - வ.உ.சி.கொள்ளு பேத்தி செல்வி பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை
சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் 153வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வ.உ.சியின் கொள்ளுப்பேத்தி செல்வி அவரது வீட்டில் வ.உ.சி யின் திருவுரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.இதில் திரைப்பட தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினருமான வழக்கறிஞர் முருகானந்தம், மருத்துவர் அறுவை சிகிச்சை நிபுணர் கபிலாஸ் போஸ், மோனிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து வ.உ.சியின் கொள்ளுப்பேத்தி செல்வி செய்தியாளர்களிடம் பேசுகையில் நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சியின் வெண்கல திருவுருவ சிலை நிறுவ வேண்டும், மேலும் அவரது பிறந்த நாளை தேசிய வழக்கறிஞர் தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்தயுள்ளதாக கூறினார்.
உங்கள் கருத்தை பதிவிடுக