கோவில்பட்டி அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூபாய் 100 வழங்கினால் மட்டும் பணி என்பதை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டகிராம மக்கள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மஞ்சநாயக்கர்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி புரிவதற்கு ரூ.100 கொடுக்க வேண்டும் என்று பணித்தள பொறுப்பாளர்கள் கட்டாயப்படுத்துவதாகவும், பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் சூழ்நிலை இருப்பதாகவும், அதுமட்டுமின்றி இந்த ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், எனவே இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மஞ்சநாயக்கர்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோடாங்கிபட்டி கிராம மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.
உங்கள் கருத்தை பதிவிடுக