Nigazhvu News
26 Nov 2024 8:53 PM IST

Breaking News

கோவில்பட்டி நகரில் ஒலி - ஒளி மாசு ஏற்படுத்தும் மினி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

Copied!
Nigazhvu News

கோவில்பட்டி நகரில் ஒலி - ஒளி மாசு ஏற்படுத்தும் மினி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காற்று ஒலிப்பான்கள் அதிக சத்தத்தை ஏழுப்புவதால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கிறார்கள் 

அத்தகைய பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு அளித்தனர் 


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்திலிருந்து மந்தித்தோப்பு ,வேலாயுதபுரம் வடக்கு மற்றும் தெற்கு திட்டங்குளம், ரயில்வே நிலையம் , கூசாலிபட்டி , லிங்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 38 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.. இந்த மினி பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் ஆங்காங்கே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த மினி பேருந்துகளில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட காற்று ஒலிபான்களை பொருத்தி அதிக சத்துத்துடன் ஒலி எழுப்புவதால் பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் கண்களைப் பாதிக்கும் வகையில் மினி பேருந்துகள் , சுற்றுலா வேன்களில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரித்து செல்வதால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சொல்ல வேண்டி இருப்பது மட்டுமின்றி விபத்துகளும் ஏற்படும் சூழ்நிலை உள்ளது


எனவே ஒலி மற்றும் ஒளி மாசு ஏற்படுத்தும் மினி பேருந்துகள் மற்றும் சுற்றுலா வேன்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் அதன் மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர் 


மேலும் தங்களது கோரிக்கை மனுவினை வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியனிடம் கொடுத்தனர்.


இதில் நிர்வாகிகள் கனி வழக்கறிஞர் கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

புதுக்குளம் ஊராட்சி செயலாளர் மீது தாக்குதல் நடத்திவர்கள் மீது நடவடிக்கை கோரி. ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் சாத்தான்குளம் போலீசில் புகார்.

171 மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டியை கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி வழங்கினார்.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!