Nigazhvu News
26 Nov 2024 6:49 PM IST

Breaking News

புதுக்குளம் ஊராட்சி செயலாளர் மீது தாக்குதல் நடத்திவர்கள் மீது நடவடிக்கை கோரி. ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் சாத்தான்குளம் போலீசில் புகார்.

Copied!
Nigazhvu News

புதுக்குளம்  ஊராட்சி செயலாளர் மணிகண்டனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி  புகார் அளித்த  ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர்.

புதுக்குளம் ஊராட்சி செயலாளர் மீது தாக்குதல் நடத்திவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் நேற்று சாத்தான்குளம்   காவல் நிலையத்தில் சனிக்கிழமை  புகார்  அளித்தனர். காவல் ஆய்வாளர்  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து கலைந்து சென்றனர். 


சாத்¢தான்குளம் ஒன்றியம்  புதுக்குளம் ஊராட்சி செயலாளராக மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார். ஆலங்கிணற்றைச்சேர்ந்த சுடலை மணிக்கு  ஊராட்சியில் வீட்டு சொத்துவரி தொடர்பாக  பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில்  இது தொடர்பாக ஊராட்சி செயலாளருக்கும், அவருக்கு இடையே   வெள்ளிக்கிழமை   பிரச்னை  ஏற்பட்டதில்  சுடலைமணி, அவரது மகன் விக்னேஷ் ஆகிய இருவரும்  ஊராட்சி செயலாளர் மணிகண்டனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த ஊராட்சி செயலாளர் மணிகண்டன், சாத்தான்குளம்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஊராட்சி செயலாளர் மணிகண்டன் தாக்கியவர்கள்  மீது நடவடிக்கை எடுக்ககோரி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழநாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க சாத்தான்குளம் வட்டத் தலைவர் சுடலையாண்டி தலைமையில் பொருளாளர் பிரம்மநாயகம், மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஜார்ஜ் சிங்கத்துரை, ராஜா, ஆரோக்கியராஜ் , இசக்கியப்பன், அருணாதேவி, பொன்மணி உள்ளிட்ட 22 ஊராட்சி செயலாளர்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தனர். அப்போது காவல் ஆய்வாளர் பணி நிமித்தம்  காரணமாக வெளியே சென்றிருந்ததால்  காத்திருந்தனர். சுமார் 2மணி நேரம் கழித்து வந்த காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரனிடம் மனு அளித்தனர். 


அதில் சங்க வட்ட செயலரும், புதுக்குளம் ஊராட்சி செயலாளர் மணிகண்டனை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும். மணிகண்டன் குடும்பத்திற்கு பாதுகாப்பு தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்ற காவல் ஆய்வாளர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் கலைந்து சென்றனர். 


இதுகுறித்த ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் கூறுகையில் ஊராட்சி செயலாளர் மணிகண்டனை தாக்கியவர்களை  கைது செய்ய வேண்டும். அவ்வாறு கைது செய்யாதபட்சத்தில்   திங்கள்கிழமை  (16ஆம் தேதி) பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம்  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும்  புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

எட்டயபுரம் பகுதியில் நள்ளிரவில் இரண்டு கடைகளை பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் திருட்டு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு

கோவில்பட்டி நகரில் ஒலி - ஒளி மாசு ஏற்படுத்தும் மினி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!