Nigazhvu News
07 May 2025 7:54 PM IST

விளாத்திகுளம் அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் திருட்டு - போலீசார் விசாரணை

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி அன்னம்மாள் (54). இவர், விளாத்திகுளத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனியார் பேருந்தில் எட்டயபுரத்துக்கு  வந்தார்.


எட்டயபுரம் அருகே பேருந்து வந்த போது, தனது கழுத்தில் அணிந்து இருந்த ஆறு பவுன்  தாலி செயின் காணாமல் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையெடுத்து எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தனியார் பேருந்து ஊழியர்கள் தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர் ஆனால் நகை கிடைக்கவில்லை.பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அன்னம்மாள் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் திருடிவிட்டு இதற்கு முந்தைய நிறுத்தத்தில் இறங்கி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அன்னம்மாள்எட்டயபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

விடுமுறை எடுக்க பெற்றோர்கள் மறுத்தால் பள்ளிக்குச் செல்லாமல் மாயமான மாணவிகள்

எட்டயபுரம் பகுதியில் நள்ளிரவில் இரண்டு கடைகளை பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் திருட்டு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்