விடுமுறை எடுக்க பெற்றோர்கள் மறுத்தால் பள்ளிக்குச் செல்லாமல் மாயமான மாணவிகள்: பள்ளி அருகே பாட்டி வீட்டில் விளையாடிய மாணவிகளை மீட்டு - பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்,விளாத்திகுளத்தில் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய சரகம் போலீஸ் லைன் தெருவை சேர்ந்த மாடசாமி மகள் கீர்த்தனா (வயது 15). வரும் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அதே போன்று மஞ்சுநாதன் என்பவரது மகள்கள் ரெஜினா (வயது 12 ) 7ம் வகுப்பும் ,ரஞ்சனி (வயது 11) 6ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இசக்கி முத்து மகள் பிருந்தா லட்சுமி (வயது 8) அங்கு உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நான்கு சிறுமிகள் இன்று காலையில் பள்ளிக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் பள்ளிக்குச் செல்லவில்லை என்ற தகவல் வெளியானது. இதை எடுத்து பெற்றோர்கள் மற்றும் பள்ளிகள் தரப்பில் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அப்ப பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.இதில் கீர்த்தனா என்ற மாணவி ரெஜினா, ரஞ்சனி, பிருந்தா லட்சுமி ஆகிய மூன்று மாணவிகளை அழைத்துக் கொண்டு விளாத்திகுளம் - மதுரை சாலையில் செல்லும் காட்சிகள் சிசிடிவி கட்சியில் பதிவானது தெரியவந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும் போலீசார் ,மாணவிகளின் பெற்றோர்களுடன் சேர்ந்து அவர்களது உறவினர்கள் வீட்டில் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பள்ளி அருகே மாணவி ரெஜினா பாட்டி வீடு ஒன்று இருப்பதும், அந்த வீட்டில் யாரும் இல்லை என்பதும் போலீசார் கருத்து தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது நான்கு மாணவிகளும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் 4 மாணவிகளை மீட்டு விசாரணை நடத்தினர். சனி ஞாயிறு விடுமுறை விட்டதாலும், இன்று ஒரு நாள் தான் பள்ளி நாளை விடுமுறை என்பதால், இன்று பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை என்று தங்கள் வீட்டில் தெரிவித்ததாகவும், தங்களது பெற்றோர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு செல்ல வேண்டும் வற்புறுத்தியதால், பள்ளிக்குச் செல்லாமல் இங்கு வந்து விளையாடியதாகவும், பள்ளிவிட்டதும் வீட்டிற்கு செல்ல இருந்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் மாணவர்களுக்கு போதிய அறிவுரைகளை வழங்கி, இனி இது போன்ற தவறுகளை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
பள்ளிக்குச் சென்ற நான்கு மாணவிகள் மாயமாகி பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக