Nigazhvu News
08 May 2025 6:14 PM IST

தூத்துக்குடி - புதியம்புத்தூர் - சென்னை இடையே புதிய வழித்தடத்தில் அரசு விரைவுப்பேருந்து இயக்க எம்எல்ஏ சண்முகையா கோரிக்கை

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், நீதிமன்றம், சார்பதிவாளர் அலுவலகம், அரசு கருவூலம், வேளாண்மைத்துறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், கல்வித்துறை அலுவலகங்கள், சுகாதாரத்துறை அலுவலகங்கள் என பல அரசு அலுவலகங்கள்  அமைந்துள்ளன. மேலும் புதியம்புத்தூரில் ஜவுளி உற்பத்தி தொழிலும், பல்வேறு தொழில்களும்  பல ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகின்றன.


ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெளியூர்களில் கல்வி பயின்று வருகின்றனர். அரசு ஊழியர்கள், மாணவர்கள், ஜவுளி வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு பணிகள் நிமித்தமாகவோ, கல்வி நிமித்தமாகவோ செல்வதற்கு நேரடியாக போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் இங்கிருந்து தூத்துக்குடி சென்று அங்கிருந்து அரசு விரைவு பேருந்துகள் மூலமாக சென்னை செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

ஓட்டப்பிடாரம் புதியம்புத்தூர் பகுதியில் இருந்து சென்னைக்கு நேரடியாக பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் அரசு ஊழியர்களும், வியாபாரிகளும், மாணவர்களும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில்  சில பேருந்துகளை புதியம்புத்தூர் ஓட்டப்பிடாரம் குறுக்குசாலை வழியாக சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலமாக இயக்க நடவடிக்கை எடுக்குமாறு   தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை சென்னையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தார் .


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கொம்புகாரநத்தம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் தடை அறிவிப்பு

விடுமுறை எடுக்க பெற்றோர்கள் மறுத்தால் பள்ளிக்குச் செல்லாமல் மாயமான மாணவிகள்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்