Nigazhvu News
09 May 2025 12:47 AM IST

எட்டயபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்!

Copied!
Nigazhvu News

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (57) என்பவர் குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணி செய்து வருகிறார்.


இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணி ஒப்பந்தம் தொடர்பாக மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு தனது நண்பர்களான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணகுமார் (38), ரவி(53) மற்றும் மதுரை சேர்ந்த முகமது யாசின் உள்ளிட்ட 4 பேரும் TN64 Y0920 என்ற வாகன பதிவு கொண்ட காரில் வந்து கொண்டிருந்தனர்.


அப்போது இவர்கள் வந்த கார் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து எட்டையபுரம் காவல் நிலைய பொது சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே புதுப்பச்சேரியில் காணாமல் போன முதியவர் இறந்த நிலையில் மீட்பு - புதியம்புத்தூர் போலீசார் விசாரணை

கொம்புகாரநத்தம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் தடை அறிவிப்பு

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்