Nigazhvu News
09 May 2025 4:29 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே புதுப்பச்சேரியில் காணாமல் போன முதியவர் இறந்த நிலையில் மீட்பு - புதியம்புத்தூர் போலீசார் விசாரணை

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம் அருகே  புதுப்பச்சேரி நடுத்தெருவை சேர்ந்த வேலம்மாள் கணவர் செந்தூர்பாண்டியன்  (65) என்பவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தூர் பாண்டியனுக்கு 15 வருடங்களுக்கு முன்னதாக குடல் இறக்கம் நோய் தொடர்பாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருந்து மாத்திரை உட்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செந்தூர்பாண்டியன் கடந்த செப்டம்பர் 14 அன்று   தனது பழுதான நிலையில் இருந்த இரு சக்கர வாகனத்தை பழுது பார்ப்பதற்காக புதியம்புத்தூர் செல்வதாக கூறிச் சென்றவர்   வீடு திரும்பாததால் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும்  எந்தவித தகவலும் கிடைக்காததால் கடந்த செப்டம்பர் 15 அன்று  புதியம்புத்தூர் காவல் நிலையத்தில்  செந்தூர்பாண்டியன் மனைவி வேலம்மாள் அளித்த புகாரின் பேரில்  புதியம்புத்தூர் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.


 இந்நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் புதியம்புத்தூரில் இருந்து புதுப்பச்சேரி செல்லும் சாலையில் உள்ள ஒயின்ஷாப் எதிரே உள்ள காட்டுப் பகுதியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக புதியம்புத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதை அடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பார்த்தபோது காணாமல் போன செந்தூர்பாண்டியன் என தெரியவந்தது இதை அடுத்து செந்தூர் பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  சம்பவம் குறித்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே தருவைகுளத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

எட்டயபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்