ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு துறையினர் ஓட்டப்பிடாரம் வஉசி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்காக தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் வடகிழக்கு மழையை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது மின்சார கசிவு காரணமாக வீடுகளில் ஏற்படும் தீ விபத்து கேஸ் சிலிண்டர் மூலமாக ஏற்படும் தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு வகையான தீ விபத்துகளை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் விவரமாக எடுத்துரைத்தனர்.
வடகிழக்கு பருவமழை மழைக்காலங்களில் ஏற்படும் இயற்கை சீற்றத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் மற்றும் மாணவ மாணவிகள் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக