கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கவுன்சிலர் குரு ராஜ் பரிசுகள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு யூனியன் செட்டி குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் ஒரு மாத காலமாக நடைபெற்ற மாநில அளவிலான ஆண்கள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மொத்தம் 36 அணிகள் பங்கேற்றன இந்த போட்டிகள் நாக்கோட் முறையில் நடைபெற்றது.
இறுதிப் போட்டிகள் நேற்று நடந்தது இதில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுத்தொகை மற்றும் சுழற் கோப்பைகளை வழங்கினார். இந்த விளையாட்டுப் போட்டிக்கு வடக்கு கோனார் கோட்டை வேல்பாண்டியன் வரவேற்பு அளித்தார், வடக்கு கோனார் கோட்டை திமுக கிளை செயலாளர் முருகன், செல்லத்துரை, சங்கிலிபாண்டி, தெற்கு கோனார் கோட்டை திமுக கிளைச் செயலாளர் செந்தூர் பாண்டியன், ஓலை குளம் திமுக இளைஞரணி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத்தொடர்ந்து முதலாம் பரிசினை வெள்ளாங்கோட்டை என்.டி.சி அணியினரும், இரண்டாவது பரிசினை தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுத் தொகை மற்றும் சுழற் கோப்பைகளை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ராஜா புதுக்குடி பால்ராஜ் கயத்தார் லோகேஸ்வரன் மகேந்திரன் மற்றும் சுற்றுவட்டார விளையாட்டு வீரர்கள் விழா கமிட்டியர்கள் ஊர் பெரியவர்கள் இளைஞர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக