Nigazhvu News
24 Nov 2024 5:32 PM IST

Breaking News

துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - கோவில்பட்டியில் பரபரப்பு

Copied!
Nigazhvu News

காரை மடக்கி பிடித்து பெட்ரோல் பங்க் உரிமையாளரை மீட்ட உதவி ஆய்வாளர்

கடத்தலுக்கு பயன்படுத்திய காரில் பாஜக கொடி -  திமுக எம்பி பேரில் கார் பாஸ் ஸ்டிக்கர் ரூ. 33 லட்ச ரூபாய்க்காக கடத்தல் நடைபெற்றதா? போலீசார் விசாரணை 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்.  இவர் நாலாட்டின்புதூரில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். இன்று காலையில் தனது இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கிற்கு சென்று கொண்டிருந்த போது, பெத்தேல் அருகே வந்த போது அவர் பின்னால் இரு கார்களில் வந்த நபர்கள் இவரை வழிமறித்து இருசக்கர வாகனத்தை பறித்து கொண்டு காரில் ஏற்ற முயற்சி செய்துள்ளனர். முத்துக்குமார் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார் முடியவில்லை. மர்ம நபர்கள் வலுக்கட்டாயமாக அவரை காரில் திணித்து கடத்தியுள்ளனர்.  இந்த சம்பவத்தை சாலையின் மறுபக்கம்  இருசக்கர வாகனத்தில் சென்ற நாலட்டின் புதூர் காவல் உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ் , அந்த கார்களை துரத்த தொடங்கியுள்ளனர். கோபாலபுரம் விலக்கு - இடைச்செவல்  இடையே ஒரு காரை உதவி ஆய்வாளர் ஒருவரை வழிமறித்து நிறுத்தினார். காரை நிறுத்தியதும் கார் டிரைவர் தப்பியோடியதாக தெரிகிறது. இதையடுத்து உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ் காரில் பார்த்து போது நெல்லையைச் சேர்ந்த ஐயப்பன், தூத்துக்குடியை  சேர்ந்த செல்வகுமார் இருவரும் முத்துக்குமாரை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.  அவர்களிடமிருந்து முத்துக்குமாரை உதவி ஆய்வாளர் மீட்டார். மேலும் ஐயப்பன், செல்வகுமார் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், காரில் இருந்த துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட காரில் பாஜக கட்சி கொடி கட்டப்பட்டுள்ளது. மேலும் அந்தக் காரில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கு வழங்கப்படும் கார் பாஸ் ஒட்டப்பட்டுள்ளது. அந்த கார் பாஸ்சில் ராஜ்ய சபா உறுப்பினர் முகமது அப்துல் (திமுக) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காரில் வாக்கி டாக்கி ஒன்றும் இருந்தது குறிப்பிடத்தக்கது.




கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் கடத்தப்பட்ட முத்துக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் தன்னுடைய பெட்ரோல் பல்க்கினை தற்போது வேறு ஒருவருக்கு விற்பனை செய்து உள்ளதாகவும், அத்தனிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்டு தனது உறவினரான தம்பி முறைவரும் கழுகுமலையை  சேர்ந்த  ராமகிருஷ்ணன் என்பவர் தூண்டுதல் பேரில் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார். 


முத்துக்குமார் குற்றம் சாட்டியுள்ள ராமகிருஷ்ணன் அவரது பல்கில் வேலை பார்த்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் இடையே 33 லட்ச ரூபாய் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை ஏற்பட்டு இது தொடர்பாக கழுகுமலை, நாலாட்டின்புதூர்  காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. 


போலீசார் பிடித்து வைத்துள்ள ஐயப்பன் மற்றும் செல்வகுமார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை முடிவில் தான் இந்தக் கடத்தலுக்கான உண்மையான நோக்கம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

இரண்டு கார்களில் மொத்தம் ஒன்பது பேர் வந்துள்ளனர்.  இதில் இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடத்த வந்தவர்களில் ஒருவர் முத்துக்குமார் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை கடத்தப்பட்டாரா? அல்லது வேற ஏதும் காரணமா என்பது முழு விசாரணைக்கு பின்பு தான் தெரிய வரும். இந்தச் சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பினை  ஏற்படுத்தி உள்ளது.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்திருநகரியில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

சாத்தான்குளம் முதலூரில் யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!