ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் வடக்கு தெருவை சேர்ந்த ஸ்டீபன்(56) என்பவர் அக்கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் கிராமத்தில் வாழைப்பயிர் பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலையில் ஸ்டீபன் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று உள்ளார். அப்போது தனது வாழை தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 300க்கும் மேற்பட்ட வாழை பயிர்கள் எரிந்து நாசமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதே போல் அருகில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட தென்னைகள் சப்போட்டா மரங்கள் மற்றும் சுமார் 60 மீட்டர் மோட்டார் வயர் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து சேதம் ஆகி இருந்தது தெரியவந்தது மேலும் நேற்று இரவு மர்ம நபர்கள் தெப்பக்குளம் அருகில் உள்ள கோவில் பகுதியில் மர்ம நபர்கள் வைத்த தீ அருகில் இருந்த ஸ்டீபனின் வாழைத்தோட்டத்திற்கு தீ பரவி தீப்பிடித்திருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து ஸ்டீபன் கூறுகையில், தனது தோட்டத்தில் சுமார் 900 க்கும் மேற்பட்ட வாழைகள் பயிரிடப்பட்டிருந்த நிலையில் ஒரு சில வாழைகள் குழை தள்ளிய நிலையிலும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையிலும் மர்ம நபர்கள் வைத்த தீயால் வாழை பயிர்கள் தென்னை சப்போட்டா பயிர்கள் சேதம் ஆகியுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் சேதமாகிய வாழை பயிர்களுக்கு உரிய இழப்பீடு தந்தால் மட்டுமே மேலும் விவசாயம் பண்ண முடியும் என வேதனையுடன் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவிடுக