Nigazhvu News
17 Mar 2026 3:24 AM IST

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த நான்கு பேர் கைது - 6 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல்

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஐயப்பன் கோவில் அருகே உள்ள அணுகு சாலையில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஸ்டீபன் தலைமையில் தனிப்பிரிவு காவலர்கள் தலைமைக் காவலர் முத்துமாரி, முதல் நிலை காவலர் செசிலின் வினோத், காவலர் முத்துராமலிங்கம், காவலர் அருணாச்சலம் ஆகியோர் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் இருந்த போது அந்தப் பகுதியில் டாட்டா ஏசி வாகனத்தில் சத்தியமூர்த்தி என்ற இளைஞர் கஞ்சா புகைத்து கொண்டிருப்பதை பார்த்து அவரை பிடித்து விசாரித்து விசாரணை நடத்தினர்.


விசாரணையில் அவர் மேட்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகையா மகன் சத்தியமூர்த்தி (20) என்பதும் , கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து சத்தியமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பெயரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ‌ சீனிவாச நகரை சேர்ந்த கணேசன் மகன் பாலாஜி (29), வ உ சி நகரைச் சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணி (27), மேட்டுக்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகாயை மகன் காளீஸ்வரன் (24) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமிருந்து 6 கிலோ 500 கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு டாடா ஏசி வாகனங்கள், ஒரு பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து கோவில்பட்டி மது விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு

ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரத்தில் மர்ம நபர்கள் தீ வைப்பு - வாழை பயிர்கள் சேதம்; விவசாயி வேதனை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்