Nigazhvu News
19 Apr 2025 6:02 PM IST

ஓட்டப்பிடாரம் அருகே சாமிநத்தம் கிராமத்தில் இரு சக்கர வாகன விபத்தில் லாரி டிரைவர் பலி - உடலை கைப்பற்றி புதியம்புத்தூர் போலீசார் விசாரணை

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சாமிநத்தம் கீழ தெருவை சேர்ந்த யாக்கோபு மகன் ஞானதுரை (45) என்பவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகின்றார்.


இவருக்கு கந்தஜோதி என்ற மனைவியும் இரு ஆண் பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலையில் ஞானதுரை என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் புதியம்புத்தூர்  சென்று விட்டு சாமிநத்தம் நோக்கி வந்து கொண்டிருந்த போது அருகில் உள்ள காற்றாலை சாலை பாலம் அருகே வளைவு பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலை தடுமாறி பள்ளத்திற்குள் சென்று விபத்துக்குள்ளானதில் ஞானதுரைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஞானதுரையை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வைத்தனர்.

அங்கு அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஞானதுரை வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு தனது மனைவியுடன் ஆட்டோவில் தனது சாமிநத்தம் கிராமத்திற்கு சென்றுள்ளார்.  இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில்  கந்தஜோதி எந்திரித்து பார்த்த பொழுது  தனது கணவர் ஞானதுரை இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீதாராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த ஞானதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்....


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

விளாத்திகுளம் அருகே செங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 31 மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

பிடானேரி ஊராட்சியில் தூய்மையே சேவையை வலியுறுத்தி மனித சங்கிலி

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்