முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் ரெய்டு : தொண்டர்களுக்கு தடபுடல் விருந்து
முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்திய லஞ்சஒழிப்பு துறையினர் துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 810 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு செய்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது 2018 ம் ஆண்டில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை 6 மணி முதல் லஞ்சஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினார்கள். அவருக்கு தெடர்புடைய சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
நேற்று மாலை 5.30 மணியளவில் இலஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை நிறைவடைந்தது. எஸ்.பி.வேலுமணி வீட்டில் 11 மணி நேரம் நடந்த சோதனையில் பாதுகாப்பு பெட்டக சாவி தவிர வேறு எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சான்றிதழ் வழங்கிச் சென்றனர். மதுக்கரை பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் உறவினர் சண்முகராஜா இல்லத்தில் நடந்த 7 மணி நேர கைப்பற்றப்படவில்லை என சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 13 லட்சத்து, 8,500 ரூபாய் ரொக்கம், நிலப்பத்திரங்கள், தொழில் நிறுவனங்களின் வர்த்தக பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள டெபாசிட் ஆவணம். மாநகராட்சிகளின் அலுவலக கோப்புகள், எலக்ட்ரானிக் ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுளளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.
இந்த சோதனையின் போது வேலுமணி யின் கோவை குனியமுத்தூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடப்பதை அறிந்த அதிமுக தொண்டர்கள் அங்கு குவிந்தனர். வெயிலில் அமர்ந்து போராட்டம் நடத்திய தொண்டர்களுக்கு காலை டிபன், ரோஸ் மில்க், மதிய உணவாக கலவை சாதம், பிரியாணி, டீ என அனைத்தும் வழங்கப்பட்டது. அதனை வாங்கி உண்டு தொண்டர்கள், வீட்டின் வாசலில் அமர்ந்தபடி தெம்பாக போராட்டம் நடத்தினர்.
உங்கள் கருத்தை பதிவிடுக