Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

மழை வெள்ளப் பாதிப்பு பகுதிகளை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

Copied!
Nigazhvu News

மழை வெள்ளப் பாதிப்பு பகுதிகளை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

 கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு இடங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்த்து ஆய்வு செய்து வருகிறார்.

தொடர்ச்சியாகப் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு. நிவாரணம் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

முதலில் சென்னைப் பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர், தொடர்ந்து காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்றுப் பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக இன்று டெல்டா பகுதிகளில் மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு வருகிறார்.‌

 இன்று (சனிக்கிழமை) காலை புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிட இருக்கிறார்.

கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம்அடூர் அகரம் பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதோடு, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்

பருவமழையினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி பகுதியில் வசிக்கும் 31 குடும்பங்களுக்கு அரசின் நிவாரண உதவியை வழங்கிய முதல்வர், மயிலாடுதுறை மாவட்டம் இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளில் பார்வையிட புறப்பட்டார்

 தொடர்ந்து நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வெள்ளப் சேதத்தை ஆய்வு செய்ய இருக்கிறார்

 




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கோவை மாணவி தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3-வது நாளாக நீடிக்கும் கனமழை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்