Nigazhvu News
17 Mar 2026 3:16 AM IST

கோவை மாணவி தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் கைது

Copied!
Nigazhvu News

கோவை மாணவி தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் கைது 

கோவை பள்ளி மாணவியின் தற்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான இயற்பியல் ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இறந்த மாணவியின் உடலைப் பெற்றுக்கொண்டனர்.

கோவையில் உள்ள சின்மயா மெட்ரிக் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின்  பாலியல் தொல்லை எல்லை மீறியதால் மனமுடைந்த +2 மாணவி  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் அந்த மாணவி எழுதிய கடிதத்தில் தனது மரணத்துக்கு காரணமாக சிலரின் பெயர்களை  எழுதியிருந்தார். 

மாணவியின்  பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து கோகவை போலீஸார் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

இயற்பியல் ஆசிரியர் மிதுன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில்,  பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்யக்கோரி பலரும் போராட்டங்கள் செய்து வந்தனர் . இந்நிலையில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது உள்ளனர். 

பள்ளி முதல்வரை கைது செய்யும் வரை, மாணவியின் உடலைப் வாங்க மாட்டோம் என்று உறுதியாக இருந்த மாணவியின் பெற்றோர், மீரா ஜாக்சனின் கைதை தொடர்ந்து மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள சம்மதித்து உள்ளனர். தமிழக அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி ஆகியோர்  மாணவியின் வீட்டிற்கு வந்து இறந்த மாணவியின் உடலுக்கு  அரசு சார்பில் அஞ்சலி செலுத்த உள்ளனர். 

மேலும் மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மேலும் இரண்டு பேர் யார் என்ற விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு : 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மழை வெள்ளப் பாதிப்பு பகுதிகளை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்