
பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரையின்படி தமிழகம் முழுவதிலும் பாஜக உறுப்பினர் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான புதிய உறுப்பினர் சேர்க்கை இயக்க மாவட்ட அளவிலான பயிலரங்கம் தென்திருப்பேரையில் நடைபெற்றது.
பயிலரங்கிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாலர் கேசவ விநாயகம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜா, சிவமுருக ஆதித்தன், உமரி சத்தியசீலன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பயிலரங்கில், சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை புதிதாக சேர்த்திட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. பயிலரங்கில், பாஜக புதிய உறுப்பினர் சேர்க்கை மாவட்ட பொருப்பாளர்கள் சிவராமன், செல்வராஜ் , இசக்கி முத்து, சுதா, வினோத், பாஜக மாவட்ட துணை தலைவர்கள் வாரியார், சரஸ்வதி, மாலட்ட செயளாலர்கள் வீரமணி, கணல் ஆறுமுகம், ராஜ புணிதா, பாப்பா, ராமகனி, மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட நிர்வாகி பல்க்கு பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய தலைவர் குமரேசன் நன்றி கூறினார்.
உங்கள் கருத்தை பதிவிடுக