
தமிழகத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்புத் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு இன்று கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் முன்னிட்டு தேமுதிக மாவட்ட செயலாளர் சித்திரை ராஜ் தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் சதீஷ் முன்னிலையில் சாத்தான்குளம் ஒன்றியம் தட்டார்மடம் மெயின் பஜாரில் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் லூகாஸ் பிரேம்ராஜ் மற்றும் தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர் இதில் தட்டார்மடம் மெயின் பஜாரில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
உங்கள் கருத்தை பதிவிடுக