
மத்திய இணை அமைச்சராக எல்.முருகன் பதவியேற்ற நிலையில், தமிழக பாஜக மாநில புதிய தலைவராக அண்ணாமலை ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பாஜக-வின் புதிய தலைவராக அண்ணாமலை ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவு தற்போதிலிருந்து நடைமுறைக்கு வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை, கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிவந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதன்பின் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடதக்கது.
உங்கள் கருத்தை பதிவிடுக