Nigazhvu News
21 Apr 2025 1:37 PM IST

ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக களமிறங்கிய அவரது தங்கை ஷர்மிளா : புதிய கட்சித் தொடக்கம்

Copied!
Nigazhvu News

புதிய கட்சித் தொடக்கம் : ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக களமிறங்கிய அவரது தங்கை ஷர்மிளா 

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக  தங்கை ஒய்.எஸ் ஷர்மிளா ரெட்டி அரசியலில் களமிறங்கியுள்ளார். ஒய்.எஸ் ஆர். தெலுங்கானா கட்சி என்ற தனது கட்சியை அவரது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளான இன்று தொடங்கி இருக்கிறார்.


ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பிறகு, காங்கிரஸ் கட்சியிலிருந்து புறக்கணிக்கப்பட்ட அவரது மகன் ஜெகன்மோகன் புதிய கட்சியொன்றை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் 2011ல் ஆரம்பித்தார். தந்தையின் செல்வாக்குடன் அரசியலில்  களமிறங்கினாலும் அதிகாரத்தைக் கைப்பற்ற கிட்டதட்ட எட்டு ஆண்டுகள் எடுத்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரண்டாக உடைபட்டது ஆந்திரபிரதேசம். அதில் ஆந்திராவில் ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெகன்மோகன் அதிரடி அறிவிப்புகளால் கவனம் ஈர்த்தார். அதற்கு பின்புலமாக இருந்து இயங்கிய அவரது தங்கையான ஷர்மிளா, தந்தையின் செல்வாக்கை மீட்டெடுக்க பெரிதும் உதவினார்.

ஆந்திராவில் ஆட்சியிலிருந்த சந்திரபாபு நாயுடுவின்  தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக, மாநிலம் முழுவதும் பயணித்து ஆதரவு திரட்டினார். தன் தந்தையைப் போலவே,  பாதயாத்திரை செய்து மக்களைக் கவர்ந்தார். அவரது தீவிர பிரச்சாரத்தால்  ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஜெகன்மோகன் முதலமைச்சரான பிறகு, ஆந்திராவில் கவனம் செலுத்திய அளவிற்கு தெலுங்கானாவில் அவர் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. ஒரு கட்டத்தில் முற்றிலுமாக தெலுங்கானவைப் புறக்கணித்தார்.


ஜெகன்மோகன் தனது புதிய கட்சியை 2011ல் தொடங்கினாலும், இரண்டாகப் பிரிந்த மாநிலத்தில்  தெலுங்கானாவை விடுத்து ஆந்திராவில் மட்டுமே கவனம் செலுத்தினார்.  இதனால் ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த அவரால் தெலுங்கானாவில் கால் ஊன்ற முடியவில்லை. தெலுங்கானாவில் அதிக செல்வாக்கு மிக்க நபராக விளங்கினார் ராஜசேகர ரெட்டி.  ஜெகன் மோகன் ரெட்டியின் செயல்பாடுகளால், ஒய்.எஸ்.ஆர்க்கு  பின்னால் அந்த செல்வாக்கு சிறிது சிறிதாக சரிந்து ஒன்றுமில்லாமல் போவதை உணர்ந்த அவரது மகள் ஷர்மிளா தனது கவனத்தை தெலுங்கானாவை நோக்கி திருப்பினார்.

இதனால்  தனது தந்தையின் செல்வாக்கை மீட்டெடுக்க தனிக்கட்சித் தொடங்கும் நடவடிக்கைகளில் களமிறங்கினார். கடந்த ஏப்ரலில் பிரமாண்டப் பேரணி நடத்தி தனது அரசியல் நிலைப்பாடு பற்றி வெளிப்படையாக அறிவித்தார். இதனால் 2023 தேர்தலுக்கு முன்பாக  புதிய கட்சி பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில்‌, ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளான ஜுலை 8ல் ஒய்.எஸ் ஆர். தெலுங்கானா கட்சி என்ற தனது  புதிய கட்சியைத் தொடங்கி இருக்கிறார். தன் அண்ணனுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அவரது துணையின்றி தனிக்கட்சி தொடங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

ஆந்திரா மற்றும் தெலுங்கானவிற்கு இடையிலான நதிநீர்ப் பங்கீட்டை கையிலெடுத்துள்ள ஷர்மிளா, தெலுங்கானா நதி நீரை ஆந்திரவிற்கு தரமுடியாது என்ற நிலைப்பாட்டில் பேசியிருக்கிறார். தன்னை ஆந்திராவிற்கு எதிரானவாராகவும், தெலுங்கானா மண்ணின் மகளாகவும் முன்னிறுத்தும் ஷர்மிளாவின் இந்ததிட்டம், அவருக்கு தெலுங்கானாவில் ஆதரவு அலையை உண்டாக்கி உள்ளது.

ஷர்மிளா தனது கட்சியின் அரசியல் ஆலோசகராக ஐபேக் பிரஷாந்த் கிஷோரிடம் பணியாற்றிய பிரியா ராஜேந்திரனை நியமித்துள்ளதாக செய்திகள் பரவியுள்ளது. சோசியல் மீடியா ஸ்ட்ராட்டஜிஸ்ட்டான இவர், சேலம் திமுக எம்.எல்.ஏ ராஜேந்திரனின் மகளாவார். இதனை எம்.எல்ஏ ராஜேந்திரன் மறுத்துள்ளார்.

கட்சியைத் தொடங்கி வைத்த பிறகு பேசிய ஷர்மிளா, ஆளும் சந்திரசேகர்ராவின் ஆட்சியைக் குற்றம் சாட்டினார்.  ஆந்திராவை அண்ணன் ஜெகன்மோகன் கைப்பற்றியது போல், தெலுங்கானாவை தங்கை ஷர்மிளா கைப்பற்றுவாரா என்பதை அரசியல் வட்டாரங்கள் ஆர்வத்தோடு கவனித்து வருகின்றன.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தமிழகத்திற்கு புதிய ஆளுநர் - ரேசில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள்

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்

இராதேயன்

சாத்தான்குளத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

இராதேயன்

"தமிழனை மன்னிப்பு கேட்க வைத்ததால் இன்று நாடே பற்றி எரிகிறது" - விளாத்திகுளத்தில், கடம்பூர் ராஜூ பேச்சு!

இராதேயன்

திமுக 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு நிர்வாகிகள் வீடுகளில் திமுக கொடியேற்றி கொண்டாட எம்எல்ஏ சண்முகையா அழைப்பு