Nigazhvu News
17 Mar 2026 3:14 AM IST

டி20 தொடர் : இந்தியா அசத்தல் வெற்றி - 38ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது புவி, சாஹல், சூர்யா அபாரம்.

Copied!
Nigazhvu News

டி20 தொடர் : இந்தியா அசத்தல் வெற்றி - 38ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது : புவி, சாஹல், சூர்யா அபாரம் 

இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தினார். புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20  தொடரில்  விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில்  இந்தியா வென்ற நிலையில், முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார்.  இரு அணிகளிலும் தலா இரண்டு புதுமுக வீரர்கள் அறிமுக போட்டியில் ஆடினர். இந்திய அணியில் பிரித்வி ஷா மற்றும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி முதல் போட்டியில்  களமிறங்கினர். இலங்கையில் கருணரத்னே மற்றும் அஸ்லங்கா அறிமுகமாகினர். 

அறிமுக வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா முதல் பந்திலியே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த தவான் மற்றும் சாம்சன் ஜோடி சிறப்பாக ஆடி பவர்பிளே ஓவர்களில் 50 ரன்கள் குவித்தது. 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து  சாம்சன்  அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டிய இந்திய அணி, கடைசி கடட்த்தில் ரன்கள் எடுக்க தடுமாறியது.  அதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி சார்பில் ஹஸ்ரங்கா, சமீரா சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் 50 ரன்களும், கேப்டன் பிகார் தவான் 36 பந்துகளில் 46 ரன்களும்  எடுத்து ஆட்டமிழந்தனர். இஷான் கிஷன் 14 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி, முதல் 6 ஓவர்களில் சிறப்பாக விளையாடி ஒரு விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் சேர்த்தது. 

அதன் பிறகு மிடில் ஆர்டர் வழக்கம் போல் சொதப்ப தடுமாறியது. இந்திய அணியின் சாஹில் மிகச்சிறப்பாக பந்து வீசி இலங்கைக்கு நெருக்கடி கொடுத்தார். இலங்கை அணியில் அஸ்லங்கா மட்டும் சிறப்பாக விளையாடி 26 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். 


மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகி இலங்கை அணி 18.3 ஓவர்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணியின் புவனேஸ்வர் குமார் 3.3 ஓவர்கள் பந்து வீசி 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்களில்  19 ரன்கள்  கொடுத்து 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

முடிவில்  இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று , 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.  இந்திய அணியின் புவனேஸ்வர் குமார் ஆட்டநாயகன் விருதை வென்றார். 


இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஆட்டம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. 


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு : இரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியா த்ரில் வெற்றி : சாஹர், புவி அபாரம்

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

மும்பை டெஸ்ட்: இந்தியா அணி சாதனை வெற்றி - 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா

மித்ரன்

மும்பை டெஸ்ட்: நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது : மாயங்க் அகர்வால் 150 ரன் குவிப்பு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா - போராடி டிரா செய்த நியூசிலாந்து

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: வாகை சூடுமா இந்தியா - நியூசிலாந்து வெற்றிபெற 284 ரன்கள் இலக்கு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: அக்சர் பட்டேலின் சுழலில் முன்னிலை பெற்றது இந்தியா : லேதம் - யங் சிறப்பான பேட்டிங்