Nigazhvu News
17 Mar 2026 3:16 AM IST

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு : இரசிகர்கள் அதிர்ச்சி

Copied!
Nigazhvu News

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு : இரசிகர்கள் அதிர்ச்சி 

இங்கிலாந்தின் முன்னணி கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ், உடனடியாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் காலவரையற்ற இடைவெளி எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இங்கிலாந்து அணியின்  நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். தனது தனித்திறமையால் பெரும் ரசிகர்களைக் கவர்ந்த இவர், தலைசிறந்த ஆலரவுண்டர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். கடந்த உலகக்கோப்பையை இங்கிலாந்து வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ்.

நியுசிலாந்தில் பிறந்திருந்தாலும், இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்த இவர், தனது அபார ஆட்டத்திறமையால் இங்கிலாந்து அணியின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் அசத்தும் சிறந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் தனியொருவனாக பல போட்டிகளை இங்கிலாந்திற்கு வென்று கொடுத்தார்.


இந்நிலையில்  அனைத்து வகையான  கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் உடனடியாக காலவரையற்ற இடைவெளி எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.  அவரது இந்த செய்தி, கிரிக்கெட் ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. கைவிரலில் ஏற்பட்ட காயம் மற்றும் மன அழுத்தம் காரணமாக  இந்தமுடிவை எடுத்துள்ளதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். 

மன நலத்திற்கு முன்னுரிமை அளித்து ஓய்வு முடிவினை எடுத்துள்ள பென் ஸ்டோக்ஸின் இந்த முடிவினை மதித்து அவருக்கு உறுதுணையாக இருப்போம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது‌. இந்தியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்திற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. 


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

டி.என்.பி.எல்.லில் கிரிக்கெட் ஜாம்பவான்களைப் பிரதிபலிக்கும் நம்ம பசங்க - நம்ம ஊரு நம்ம கெத்து

டி20 தொடர் : இந்தியா அசத்தல் வெற்றி - 38ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது புவி, சாஹல், சூர்யா அபாரம்.

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

மும்பை டெஸ்ட்: இந்தியா அணி சாதனை வெற்றி - 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா

மித்ரன்

மும்பை டெஸ்ட்: நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது : மாயங்க் அகர்வால் 150 ரன் குவிப்பு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா - போராடி டிரா செய்த நியூசிலாந்து

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: வாகை சூடுமா இந்தியா - நியூசிலாந்து வெற்றிபெற 284 ரன்கள் இலக்கு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: அக்சர் பட்டேலின் சுழலில் முன்னிலை பெற்றது இந்தியா : லேதம் - யங் சிறப்பான பேட்டிங்