Nigazhvu News
17 Mar 2026 3:16 AM IST

கங்காருவை காலி செய்த நாகினி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பங்களாதேஷ்

Copied!
Nigazhvu News

கங்காருவை காலி செய்த நாகினி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பங்களாதேஷ் 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில்  23 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது பங்களாதேஷ்.

ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டி டாக்காவில் செவ்வாய்க்கிழமை நடந்தது. 

வார்னர், பின்ச், ஸ்மித் போன்ற முக்கிய வீரர்கள் விளையாடாத நிலையில், மேத்யூ வேடு ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டனாக இத்தொடரில் செயல்படுவார் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்திருந்தது. 

டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா  பந்துவீச்சைத் தேர்வு செய்து களமிறங்கியது. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச பங்களாதேஷ் ரன் எடுக்க முடியாமல் திணறியது. இதனால் பங்களாதேஷ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் 36 ரன்களும், அபிப் ஹூசைன் 23 ரன்களும் எடுத்தனர். அஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி அளித்தார் பங்களாதேஷின் மெஹ்தி ஹாசன். முதல் பந்திலேயே அலெக்ஸ் ஹேரி போல்ட்டாகி வெளியேற ஆட்டம் கண்டது ஆஸ்திரேலியா அணி. 

பின்னர் நசும் அகமதின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அபார வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் மார்ஷ் மட்டும் தாக்குப்பிடித்து ஆடி 45 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய நசும் அகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டிகளில் பங்களாதேஷ் பெரும் முதல் வெற்றி இதுவாகும். இது பங்களாதேஷின் நாகினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க்பால் டெஸ்ட் : ஸ்மிரிதி மந்தனா சாதனை சதம்

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவன் : அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

மும்பை டெஸ்ட்: இந்தியா அணி சாதனை வெற்றி - 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா

மித்ரன்

மும்பை டெஸ்ட்: நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது : மாயங்க் அகர்வால் 150 ரன் குவிப்பு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா - போராடி டிரா செய்த நியூசிலாந்து

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: வாகை சூடுமா இந்தியா - நியூசிலாந்து வெற்றிபெற 284 ரன்கள் இலக்கு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: அக்சர் பட்டேலின் சுழலில் முன்னிலை பெற்றது இந்தியா : லேதம் - யங் சிறப்பான பேட்டிங்