Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

இந்திய அணியின் புதிய கேப்டன் ரோகித்சர்மா - நியூசிலாந்திற்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு

Copied!
Nigazhvu News

இந்திய அணியின் புதிய கேப்டன் ரோகித்சர்மா - நியூசிலாந்திற்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு 

இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார். நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது

டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி சூப்பர் 12 போட்டகளோடு வெளியேறியது. கேப்டன் விராட் கோஹ்லி உலகக் கோப்பையுடன் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததால், புதிய கேப்டனுக்கான பரிசீலனையில் இந்திய நிர்வாகம் இறங்கியது. 

ரோகித், ராகுல், பண்ட் உட்பட பலரது பெயரும் பரிசீலனையில் இருந்த நிலையில், கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராகுல் துணைக் கேப்டனாகச் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அனைத்து விதமான போட்டிகளிலும் ஆடும் கோஹ்லி, பும்ரா, ஜடேஜா, முகமத் சமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  உலகக் கோப்பையில் ஆடிய பாண்டியா, தாகூர், வருண் சக்கரவர்த்தி,ராகுல் சாஹர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். 

சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், அஸ்வின், ரிஷாப் பண்ட் ஆகியோருடன் உலகக்கோப்பை அணியுடன் இணைந்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் அணியில் இடம்பிடித்து உள்ளனர். 

ஐபிஎல்- லில் அசத்திய ருத்துராஜ் கெய்க்வாட், ஹர்ஷல் பட்டேல், ஆவேஸ்கான், வெங்கடேஷ் இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சிராஜ் அணிக்கு திரும்பி உள்ளனர். 

டி20 தொடருக்கான இந்திய அணி :

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணைக்கேப்டன்), ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷாப் பண்ட்(விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் ( விக்கெட் கீப்பர்), ஹர்ஷல் பட்டேல், அக்சர் பட்டேல், அஸ்வின், ஆவேஸ்கான், முகமத் சிராஜ், புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல். 

இத்துடன் தென்ஆப்பிரிக்கவிற்கு பயணம் மேற்கொள்ளும் நான்கு நாள் போட்டிக்கான இந்திய ஏ அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் இளம் நட்சத்திரங்களான தேவ்துத் படிக்கல், வேகப்புயல் இம்ரான் மாலிக் ஆகியோருடன் தமிழக வீரர் பாபா அப்பரஜித்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. கேப்டனாக ப்ரியங் பாஞ்சல் அறிவிக்கப்பட்டுள்ளார். 


இந்திய ஏ அணி

ப்ரியங் பாஞ்சல்(கேப்டன்), ப்ரித்வி ஷா, தேவ்துத் படிக்கல், அபிமன்யூ ஈஸ்வரன், சர்ப்ராஸ்கான், பாபா அப்பரஜித், உபேந்திர யாதவ்(விக்கெட் கீப்பர்), கே கௌதம், ராகுல் சாஹர், சௌரப் குமார், நவ்தீப் சைனி, இம்ரான் மாலிக், இஷான் போரேல், அர்ஜான் நாக்வஸ்வாலா  


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

டி20 உலகக்கோப்பையை வெல்லப் போவது யார்?? : நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா - இறுதிப் போட்டிக்கான முன்னோட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க்பால் டெஸ்ட் : ஸ்மிரிதி மந்தனா சாதனை சதம்

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

மும்பை டெஸ்ட்: இந்தியா அணி சாதனை வெற்றி - 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா

மித்ரன்

மும்பை டெஸ்ட்: நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது : மாயங்க் அகர்வால் 150 ரன் குவிப்பு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா - போராடி டிரா செய்த நியூசிலாந்து

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: வாகை சூடுமா இந்தியா - நியூசிலாந்து வெற்றிபெற 284 ரன்கள் இலக்கு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: அக்சர் பட்டேலின் சுழலில் முன்னிலை பெற்றது இந்தியா : லேதம் - யங் சிறப்பான பேட்டிங்