Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

டி20 உலகக்கோப்பை : ஆஸ்திரேலியா சாம்பியன் - நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

Copied!
Nigazhvu News

டி20 உலகக்கோப்பை : ஆஸ்திரேலியா சாம்பியன் - நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி 

டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆண்களுக்கான உலகக் கோப்பை டி20 போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில்  அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. 

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி துபாயில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். 

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் 10 ஓவர்களில் தட்டுத்தடுமாறி ரன் சேர்த்தது. பிறகு கேப்டன் வில்லியம்சனின் அபார ஆட்டத்தால் 20 ஓவர்களில் 172 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் 48 பந்துகளில் 3 சிக்சர் 10 ஃபோர்களுடன் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். பந்த வீச்சில்  ஹசில்வுட் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் பிஞ்ச் 5 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். ஆனால் அதன்பிறகு ஜோடி சேர்ந்த  மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் ஜோடி அதிரடியில்  வானவேடிக்கை  காட்ட வெற்றி இலக்கை 19 ஓவர்களிலேயே எட்டி, முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. 

டேவிட் வார்னர்  38 பந்துகளில் 4 ஃபோர்ஸ்  3 சிக்சஸருடன் 53 ரன்கள் குவித்தார்.  அபாரமாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 50 பந்துகளில் 6 ஃபோர்ஸ் 4 சிக்ஸருடன் 77 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார். பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட் மட்டுமே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

கடந்த நான்கு ஐசிசி தொடர்களின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து பெறும் மூன்றாவது தோல்வி இதுவாகும். இந்தியாவுடனான டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியை நியூசிலாந்து கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

₹5 கோடி மதிப்பிலான இரண்டு கடிகாரங்களை பறிமுதல் செய்ததா சுங்கத்துறை : ஹர்திக் பாண்டியா அறிக்கை

டி20 உலகக்கோப்பையை வெல்லப் போவது யார்?? : நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா - இறுதிப் போட்டிக்கான முன்னோட்டம்

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

மும்பை டெஸ்ட்: இந்தியா அணி சாதனை வெற்றி - 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா

மித்ரன்

மும்பை டெஸ்ட்: நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது : மாயங்க் அகர்வால் 150 ரன் குவிப்பு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா - போராடி டிரா செய்த நியூசிலாந்து

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: வாகை சூடுமா இந்தியா - நியூசிலாந்து வெற்றிபெற 284 ரன்கள் இலக்கு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: அக்சர் பட்டேலின் சுழலில் முன்னிலை பெற்றது இந்தியா : லேதம் - யங் சிறப்பான பேட்டிங்