Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

₹5 கோடி மதிப்பிலான இரண்டு கடிகாரங்களை பறிமுதல் செய்ததா சுங்கத்துறை : ஹர்திக் பாண்டியா அறிக்கை

Copied!
Nigazhvu News

₹5 கோடி மதிப்பிலான இரண்டு கடிகாரங்களை பறிமுதல் செய்ததா சுங்கத்துறை : ஹர்திக் பாண்டியா அறிக்கை 

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்குப் பிறகு இந்தியா திரும்பிய ஹர்திக் பாண்ட்யாவிடம் ₹5கோடி மதிப்பிலான 2 கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்ததாக பரவிய செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து டிவிட்டரில் பதிவு ஹர்திக் பாண்ட்யா பதிவு செய்துள்ளார். 

உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணி சூப்பர் 12 போட்டிகளுடன் வெளியேறி இந்தியா திரும்பியது. அதனால் இந்திய அணியினர் கடந்த 14ம் தேதி துபாயிலிருந்து இந்தியா திரும்பினர். 

அப்போது மும்பை விமான நிலையத்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் சுங்கத்துறையினர்  ₹5 கோடி மதிப்பிலான இரண்டு கைக்கடிகாரங்களைக் கைப்பற்றியதாகவும், அதை வாங்கியதற்கான முறையான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை என்றும் செய்திகள் பரவியது. 

இதனையடுத்து ஹார்திக் பாண்ட்யாவை சமூக வலைதளவாசிகள் கடுமையான விமர்சித்து கருத்து தெரிவிக்க, செய்தி ட்ரெண்டிங் ஆனது. இதனை அறிந்த ஹர்திக் பாண்ட்யா மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். 

 அவரது ட்விட்டர் பக்கத்தில் ஹர்திக் பாண்ட்யா " நான் சட்டத்தை மீறிவிட்டதாக பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானதே. என்னிடம் ரூ.1.5 கோடி மதிப்பில் ஒரு கைக்கடிகாரம் மட்டுமே இருந்தது " என  பதிவிட்டுள்ளார்.


இது பற்றி அந்த பதிவில் " நவம்பர் 15ம் தேதி காலையில்  எனது லக்கேஜ்களை எடுக்கும் போது, மும்பை  விமானநிலைய சுங்கத்துறையினரிடம் , நான் வாங்கி வந்திருக்கும் பொருட்களுக்கு சுங்க வரி மதிப்பீடு செய்யுமாறு நானே சென்று  கூறினேன். நான் கடிகாரத்தைப் பற்றி சொன்னவுடன் அவர்கள் என்னிடம் அதற்கான ஆவணங்களைக் கேட்டனர். நான் ஆவணங்களைக் கொடுத்துள்ளேன். அவர்கள், அதற்கான சுங்க வரி மதிப்பீட்டைச் செய்து வருகின்றனர். அவர்கள் மதிப்பிட்டு தொகையைச் சொன்னவுடன் நான் வரியைச் செலுத்தப் போகிறேன்.நான் சட்டத்தை மீறிவிட்டதாக பரவும் தகவல்கள் பொய்"  என்று  விளக்கமாகப் பதிவிட்டுள்ளார். 

மேலும் " 5 கோடி மதிப்பிலான இரண்டு கடிகாரங்கள் என்பது தவறான செய்தியாகும். என்னிடம் 1.5 கோடி மதிப்பிலான ஒரு கடிகாரம் மட்டுமே இருந்தது . சட்டத்தை முழுமையாக மதிக்கிறேன். என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் ஆதராமற்றவை” என்று தெரிவித்துள்ளார்.





உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

டிராவிட்டை தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராகிறார் வி.வி.எஸ்.லட்சுமணன்

டி20 உலகக்கோப்பை : ஆஸ்திரேலியா சாம்பியன் - நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

மும்பை டெஸ்ட்: இந்தியா அணி சாதனை வெற்றி - 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா

மித்ரன்

மும்பை டெஸ்ட்: நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது : மாயங்க் அகர்வால் 150 ரன் குவிப்பு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா - போராடி டிரா செய்த நியூசிலாந்து

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: வாகை சூடுமா இந்தியா - நியூசிலாந்து வெற்றிபெற 284 ரன்கள் இலக்கு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: அக்சர் பட்டேலின் சுழலில் முன்னிலை பெற்றது இந்தியா : லேதம் - யங் சிறப்பான பேட்டிங்